Gold Rate Chennai: தொடர் சரிவில் இருந்த தங்கம் விலை இன்று உயர்ந்தது - சவரனுக்கு ரூ.328 அதிகம்!
கடந்த சில நாட்களாக சரிந்து வந்த தங்கம் விலை இன்றைய தினம் உயர்ந்துள்ளது. ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.328 அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்று வெள்ளிக்கிழமை (28.06.2024) ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.328 கூடியுள்ளது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை சரிவு முகம் காட்டி வந்த நிலையில் இன்று 1 கிராம் ஆபரணத்தங்கம் விலை ரூ.41 அதிகரித்துள்ளது.
தங்கம் விலை நிலவரம், வெள்ளிக்கிழமை (28.06.2024):
சென்னையில் சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராம் விலை ரூ.41 அதிகரித்து 6,666 ரூபாய்க்கும் 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.44 அதிகரித்து 7,272 ரூபாயாகவும் உள்ளது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.328 அதிகரித்து ரூ.53,328 ஆகவும் விற்பனையாகிறது.
சென்னை சந்தையில் 10 கிராம், 22 காரட் ஆபரணத்தங்கம் விலை ரூ.410 அதிகரித்து ரூ.66,660 என்றும் 24 காரட் சுத்தத்தங்கம் விலை 10 கிராம் ரூ.440 அதிகரித்து ரூ.72,720-ற்கும், 24 காரட் சுத்தத்தங்கம் 8 கிராம் விலை ரூ.352 அதிகரித்து ரூ.58,176 -ற்கும் விற்பனையாகின்றன.
சென்னையில் வெள்ளி விலை வெள்ளிக்கிழமையன்றும் (28-06-24) மாற்றமடையாமல் 1 கிராம் வெள்ளி ரூ.94.50 என்றும், ஒரு கிலோ வெள்ளி ரூ.94,500-ற்கும் விற்பனையாகிறது.
![Gold rate](https://images.yourstory.com/cs/18/40b57b80a91b11ed8d456bd40c7ffe66/751-1719552747605.jpg?fm=png&auto=format)
காரணம்:
தங்கம் விலையில் ஏற்றமும் இறக்கமும் உலகச்சந்தையில் விலை நிலவரங்களைப் பொறுத்தது என்பதால் உலகச் சந்தையில் விலை ஏறினால் அதன் தாக்கம் இங்கும் தெரியும். அதே போல், உள்நாட்டுத் தேவை அதிகரிப்பினால் இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.6,666(மாற்றம்ரூ.41அதிகம்)
> 22 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.53,328(மாற்றம்ரூ.328அதிகம்)
> 24 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,272(மாற்றம்ரூ.44அதிகம்)
> 24 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.58,176(மாற்றம்ரூ.352அதிகம்)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.6,615(மாற்றம்ரூ.40அதிகம்)
> 22 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.52,920(மாற்றம்ரூ.320அதிகம்)
> 24 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,216(மாற்றம்ரூ.43அதிகம்)
> 24 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.57,728(மாற்றம்ரூ.344அதிகம்)