Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT
Advertise with us

'மெட்ராஸ் தெருக் கிரிக்கெட் முதல் உலகக் கோப்பை வரை' - தனது கிரிக்கெட் ஸ்டோரியை புத்தகமாக எழுதி வெளியிட்ட அஸ்வின்!

இந்திய அணிக்காக நீண்ட காலமாக ஆடிவரும் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் அவரது வாழ்க்கைப் பயணத்தை 'I Have the Streets - A Kutti Cricket Story!' என்ற பெயரில் புத்தகமாக எழுதியிருக்கிறார்.

'மெட்ராஸ் தெருக் கிரிக்கெட் முதல் உலகக் கோப்பை வரை' - தனது கிரிக்கெட் ஸ்டோரியை புத்தகமாக எழுதி வெளியிட்ட அஸ்வின்!

Wednesday June 26, 2024 , 4 min Read

இந்திய அணிக்காக நீண்ட காலமாக ஆடிவரும் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் அவரது வாழ்க்கைப் பயணத்தை 'I Have the Streets - A Kutti Cricket Story!' என்ற பெயரில் புத்தகமாக எழுதியிருக்கிறார். விளையாட்டு பத்திரிகையாளர் சித்தார்த் மோங்காவுடன் இணைந்து எழுதியுள்ள இந்தப் புத்தகத்திற்கான அறிமுகக்கூட்டம் சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்த நிகழ்வில் அஸ்வின் அந்தப் புத்தகத்தைப் பற்றி நிறைய விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார்.

சென்னையின் மேற்கு மாம்பலத்தில் உள்ள ராமகிருஷ்ணாபுரத்தின் தூசி நிறைந்த தெருக்களில் சிறுவனாக கிரிக்கெட் விளையாடி சுற்றி திரிந்த நாட்களை நினைவு கூர்ந்த அஸ்வின்,

"அவை வாழ்க்கையின் மறக்கஇயலா நாட்கள் என்று கூறி பூரிப்படைந்தார். மேலும், அந்த தெரு கிரிக்கெட்டே அவரை இந்திய கிரிக்கெட் வீரராகுவதற்கான வலுவான அச்சாணியாக இருந்ததாக தெரிவித்தார்.

புத்தகத்தில் அஸ்வினின் கதையை தாண்டி, கிரிக்கெட்டை பற்றியும், கிரிக்கெட் உலகில் தமிழகத்தின் நிலை பற்றியும் கதையின் போக்கிலே பகிர்ந்துள்ளார்.

Ashwin

விளையாட்டு நிபந்தனைகள் காரணமாக அஸ்வின், பல விளையாட்டு போட்டிகளில் விளையாடாமல் மற்றவர்களுக்கு வழிவிட்டு உட்கார வேண்டிய நிலை இருந்துள்ளது. ஆனால், அதன் தாக்கங்கள் என்றும் அவரது விளையாட்டை பாதிக்கவிட்டதில்லை.

விளையாட்டுத் திறமையால் ஆசீர்வதிக்கப்படவில்லை, திமிர்பிடித்தவன், அதிகமாக வாதிடுபவன் மற்றும் பல கேள்விகளை கேட்கும் பையன் என அவரது வாழ்நாள் முழுவதும், அஸ்வின் அவரைப் பற்றிய பல்வேறு வகையான பார்வைகள் மற்றும் கருத்துகளுடன் போராட வேண்டியிருந்துள்ளது.

"உங்களது முகத்துக்கு நேராக உங்களை பற்றி மக்கள் பேசுவதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள் என்றால், அவர்களது முகத்திற்கு நேராக அதை திருப்பி கொடுக்கவும் உங்களுக்கு உரிமை உண்டு. ஆனால், நேரடியாக எதையும் அணுகும் நபர் என்ற பெயரில் மக்களை காயப்படுத்த வேண்டிய அவசியமில்லை. அதுதான் நற்பண்பு. ஆனால், இந்த மனநிலை முன்பே எனக்கு உருவாகியிருக்கவேண்டும் என்று விருப்பப்பட்டுள்ளேன்," என்கிறார்.

நாம் அனைவரும் 'சரியாக' இருக்க போராடுகிறோம். அப்படியானால் யாரோ ஒருவர் 'தவறு' செய்கிறார் என்பதிலும் மகிழ்ச்சியடைகிறோம்," எனும் அஸ்வின் அடுக்கடுக்காய் வாழ்க்கை தத்துவங்களை கூறுவதை கேட்கையில், ஒரு வேளை சப்தமின்றி அவர் ஒரு வழிகாட்டியாகவோ அல்லது தத்துவஞானியாகவோ ஒரு மாற்று வாழ்க்கையை உருவாக்குகிறாரா என்று ஆச்சரியப்பட வைக்கிறது.

Ashwin

அஸ்வினின் கூற்றுப்படி, மக்கள் வெறும் "60 வினாடிகளில்" அவர்களது கருத்துக்களை உருவாக்குகிறார்கள். ஆனால், அந்த கதைகளை உடைப்பதற்காக கடினமாக முயற்சி செய்வதில் எந்த அர்த்தமும் இல்லை என்கிறார். இந்த உணர்தலும், பக்குவ மனநிலையும் அவரை ஒரு நல்ல கிரிக்கெட் வீரராக மட்டுமல்லாமல் ஒரு நல்ல நபராகவும் பரிணமிக்க உதவி உள்ளது.

கிரிக்கெட்டை தாண்டி, கிரிக்கெட் போட்டியினை முழுபகுப்பாய்வு செய்து யூ டியுப்பில் வீடியோ அப்லோடு செய்வது, பயனுள்ள தகவல் மற்றும் ஆலோசனையை பெறும் நோக்கில் ஒருவருடன் கலந்துரையாடுவது என அஸ்வினின் ஆர்வம் பல பிரிவுகளில் பரவி கிடக்கிறது.

இந்திய கிரிக்கெட் வீரராக அவரது நாட்கள் பிஸியாகக் கடந்தாலும், அடுத்தடுத்த விஷயங்களை நோக்கி வேகமாகவும், ஆற்றலுடனும் செயல்படும் இந்த போக்கு,

"இந்த வாழ்நாளில் நான் செய்ய நினைக்கும் அனைத்தையும் என்னால் செய்ய முடியாவிட்டால் என்ன செய்வது?" என்ற பயத்திலிருந்து உருவாகுவதாக கூறும் அவர், பெரும்பாலும் 'அதிகம் சிந்திப்பவர்' என்று கருதப்படுகிறார். அவர்மீது எழுந்துள்ள இக்கருத்தை எதிர்க்கும் அவர், "பந்து வீச்சாளர்கள் செய்ய வேண்டியது இதுதான் (சிந்தனை); இது எங்கள் தொழில்," என்கிறார் அழுத்தமாக.

பயிற்சியின் போது அவர் செய்யும் இந்த 'சிந்தனை' தான் அவரை பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட உதவியுள்ளது. இந்த அணுகுமுறையே அவரது வர்த்தக முத்திரையான சொடக்கு (கேரம் பந்து) பந்து வீச்சு மற்றும் 516 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்துவதற்கு அவருக்கு உதவி உள்ளது.

டி 20 போன்ற பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான ஆட்டங்களில், விக்கெட்டுகளை மட்டும் ஒரு அளவுகோலாகப் பயன்படுத்த வேண்டாம் என்றும், அதற்குப் பதிலாக காலப்போக்கில் விளையாட்டில் பந்து வீச்சாளர்கள் கொண்டிருக்கும் கட்டுப்பாடு மற்றும் தாக்கத்தைப் பார்க்க வேண்டும் என்று மக்களை வலியுறுத்துகிறார். இது போன்று பலவற்றை பேசுகிறது 'ஐ ஹவ் தி ஸ்ட்ரீஸ்' புத்தகம்...

Ashwin

நினைவின் பாதையில் ஒரு பயணம்...!

விளையாட்டு பத்திரிகையாளர் சித்தார்த் மோங்காவுடன் இணைந்து அஸ்வின் இப்புத்தகத்தினை, சில இடங்களில் வேடிக்கையானதாகவும், பெரும்பாலான பகுதிகளில் புத்திசாலித்தனமாகவும் எழுதியுள்ளார். கிளப் கிரிக்கெட் மற்றும் முதல்தர கிரிக்கெட்டுடனான அவரது காலகட்டம், தமிழ்நாடு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுவது, விளையாட்டுக்கும் படிப்புக்கும் இடையேயான அவரது ஏமாற்று வித்தை, அவரது மனைவி ப்ரிதியுடனான காதல், மற்றும் அவரது தாய், தந்தையார், அவரது வாழ்க்கையில் அவருடைய தாத்தா ஆற்றிய மகத்தான பங்கு ஆகியவற்றை பற்றியும் எழுதியுள்ளார்.

புத்தக வெளியீட்டு விழாவில் அஸ்வின், அவரது தாத்தா அவர் மீது ஏற்படுத்திய தாக்கத்தை சிறுவயதில் உணராமல் இருந்ததை குறிப்பிட்டு கூறினார். தனது பேரன் கிரிக்கெட் மைதானத்தில் அதிக நேரம் செலவிடுவதை பிடிக்காத அவருடைய தாத்தா தான், தினமும் அவனை பள்ளி முடிந்தவுடன் விளையாட்டு மைதானத்திற்கும் அழைத்துச் சென்றவர்.

"பள்ளி முடிந்ததும் என்னை கூட்டிட்டு போக தாத்தா வரும் போதே, பாலும், ஷூவும் எடுத்து வருவார். பள்ளியிலிருந்து மைதானத்திற்கு என்னை சைக்கிளிலே அழைத்து செல்வார். ஆட்டோவில் கூட அழைத்துச் செல்லமாட்டார்," என்று பழைய நினைவுகளை நினைவு கூர்ந்தார்.

அஸ்வினுக்கு இந்தி தெரியாது, மற்ற கிரிக்கெட் வீரர்களுக்கு மெட்ராஸ் என்பதற்கான அர்த்தமும் என்னவென்று தெரியாது என்பதால் ஆரம்ப காலத்தில் அவர் சந்தித்த போராட்டங்களை பற்றியும் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். புத்தகத்தின் மூலம், ஆர்வமுள்ள எதிர்கால கிரிக்கெட் வீரர்கள் அஸ்வின் எதிர்கொண்ட கஷ்டங்களிலிருந்து பாடத்தினை கற்றுக்கொண்டு, வளைந்து செல்லாமல் இருப்பதற்காக அவர்களுக்கான ஆரோக்கியமான சூழலை உருவாக்க அவர் விரும்புகிறார்.

Ashwin

இந்திய அணி ஒரு பெரிய மகிழ்ச்சியான குடும்பம் என்று எண்ணினேன். இப்படித்தான் பலர் நினைக்கிறார்கள்... ஆனால், சமையலறையில் தீ பிடித்தாலும், ​​நாம் விட்டுக்கொடுக்காமல் போராடத் தயாராக இருக்க வேண்டும், என்று புரிந்துகொண்டேன்.

"2016 வரைக்குமே நான் தொடர்ந்து தொடரில் ஆடுவதற்கு இந்திய அணியோடு பயணித்தாலும் எப்போது சென்னையின் தெருக்களுக்கு வருவோம், எப்போது வீடு வந்து சேருவோம் என்றுதான் இருக்கும். நாட்டின் பிற பகுதிகளிலிருந்து நாம் மிகவும் துண்டிக்கப்பட்டிருப்பதால் இது நடக்கிறது. தமிழகத்தில் நிறைய திறமையாளர்கள் இருந்தும் ஏன் இந்திய அணிக்கு ஆட முடியவில்லை எனக் கேட்பார்கள். அதற்கு நாம் ஏனைய இந்தியவோடு தொடர்பற்று இருப்பதுதான் முக்கியக் காரணம்" என்றார்.

கதையின் போக்கிலே வெரியேஷன் தான் தன்னுடைய பலம் என்று தோனி, கௌதம் கம்பீர், கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், தமிழக முன்னாள் பயிற்சியாளர் டபிள்யூ.வி.ராமன் ஆகிய பலர் அவரது வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறுகிறார்.

2011ம் ஆண்டு தோனியின் தலைமையின் கீழ் ODI உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் ஒரு பகுதியாக அஸ்வின் இருப்பினும், போட்டித் தொடரில் ஓரிரு போட்டிகளில் மட்டுமே விளையாடினார் என்றதை ஓங்கி அழுத்தமாக கூறுவதுடன் புத்தகம் நிறைவு பகுதியை அடைகிறது.

Ashwin
"ஐ ஹேவ் தி ஸ்ட்ரீட்ஸ்- சுயசரிதை அல்ல. சுயசரிதை எழுத நான் யார்? என் கதையின் மூலம் உங்களை என் வாழ்வுக்குள் அழைத்துச் செல்ல முயற்சித்தேன்..." என்று கூறினார்.

ஆயினும், அவரது கதைக்கு இதைவிட சிறப்பாகப் பெயரிட்டிருக்க முடியாது, ஏனெனில் அஸ்வினுக்கு தெருக்களும், தெருக்களில் அவர் விளையாடிய போது கிடைத்த அன்பு ஏராளம். அவர்களில் சிலர் புத்தக வெளியீட்டு விழாவிலும் கலந்து கொண்டனர்.