Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT
Advertise with us

பரமபதம், சீட்டு விளையாட்டின் மூலம் மாணவர்களுக்கு ஊட்டச்சத்து கல்வி வழங்கும் என்ஜிஓ!

NSF அறக்கட்டளை, ஊட்டச்சத்து குறைபாடு, முறையான சுகாதாரமின்மை போன்ற பிரச்சனைகளை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டு, பள்ளிக் குழந்தைகளிடையே ஊட்டச்சத்து பற்றிய விழிப்புணர்வைப் பரப்பி, அவர்களை பிரச்சனைகளைத் தீர்ப்பவர்களாக மாற்றுகிறது.

பரமபதம், சீட்டு விளையாட்டின் மூலம் மாணவர்களுக்கு ஊட்டச்சத்து கல்வி வழங்கும் என்ஜிஓ!

Thursday June 27, 2024 , 4 min Read

அரசுப்பள்ளிகளின் ஒவ்வொரு சனிக்கிழமை வகுப்புகளிலும், வெல்லம், பால் மற்றும் வாழைப்பழம் போன்ற பல்வேறு உணவுகளின் நன்மைகளைப் புரிந்துகொள்வதற்காக சில குழந்தைகள் உணவுப் பட அட்டைகளை க்ளூ கார்டுகளுடன் பொருத்துவதில் ஈடுபடுகிறார்கள். மற்றவர்கள் சோப்பு, சோப்பு விநியோகிப்பவர்கள் மற்றும் கை கழுவும் நிலையங்களை உருவாக்க கற்றுக்கொள்வது போன்ற செயல்களில் பங்கேற்கிறார்கள்.

இந்தியாவில் உள்ள 230க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளில் 4 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான குழந்தைகள் ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரம் போன்ற முக்கியமான கருத்துகளை கற்பிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட செயல்பாடு சார்ந்த விளையாட்டுகளில் ஈடுபடுகின்றனர். இந்த கேம்கள் அனைத்தும் பெங்களூருவை தளமாகக் கொண்ட இலாப நோக்கற்ற அமைப்பான ஊட்டமளிக்கும் பள்ளிகள் அறக்கட்டளை (NSF) பள்ளிகளுக்கு வழங்கும் கருவித்தொகுப்பில் (toolkit) இருக்கின்றன.

2016ம் ஆண்டு தொடங்கப்பட்ட NSF அறக்கட்டளை, ஊட்டச்சத்து குறைபாடு, முறையான சுகாதாரமின்மை போன்ற பிரச்சனைகளை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டு, பள்ளிக் குழந்தைகளிடையே ஊட்டச்சத்து பற்றிய விழிப்புணர்வைப் பரப்பி, அவர்களை பிரச்சனைகளைத் தீர்ப்பவர்களாக மாற்றுகிறது. அடுத்தக்கட்டமாக அரசுப்பள்ளிகளை தவிர்த்து ​​பெங்களூரு மற்றும் டெல்லியில் உள்ள தனியார் பள்ளிகளுக்கும் கருவித்தொகுப்பை வழங்க திட்டமிட்டுள்ளது.

"சரியான ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரத்தின் முக்கியத்துவத்தை குழந்தைகளுக்கு உணர்த்தும் கருவித்தொகுப்பு அடிப்படையிலான அணுகுமுறையை நாங்கள் பின்பற்றியுள்ளோம். அவர்களுக்கு சரியான அறிவைக் கொடுத்து, அவர்களை சிந்தனைத் தலைவர்களாக மாற்றுவதே எங்கள் நோக்கம்," என்கிறார் என்எஸ்எஃப்- இன் இணை நிறுவனரும், சிஇஓவுமான அர்ச்சனா சின்ஹா.
Nourishing Schools Foundation

மாற்றத்திற்கான விதை...

பத்திரிகையாளராக தொழில் வாழ்க்கையினைத் தொடங்கிய அர்ச்சனா சின்ஹா, பின்னர் முதுகலை பட்டப்படிப்பைத் தொடர்ந்து, மேலாண்மை மற்றும் ஆலோசனையில் இறங்கினார். சமூக மேம்பாட்டுத் துறையில் எப்போதும் ஆர்வமாக இருந்ததால், அவர் லாப நோக்கமற்ற துறைக்கு மாற முடிவு செய்தார்.

அதன்படி, அசோகா இன்னோவேட்டர்ஸ் ஃபார் டியூசன் ப்ரோக்ராம் நிறுவனத்தில் பணியாற்றத் தொடங்கினார். அங்கு பணிபுரிந்த சமயத்தில் ஒடிசாவில் உள்ள கிராமங்களுக்குச் சென்றபோது, ​​உள்ளூர் பெண்களுடன் ஊட்டச்சத்து பற்றி விவாதித்தார். அவர்களுக்கு, சரியான ஊட்டச்சத்து பற்றி அறிவு இருந்தாலும், அது ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும்போதுதான் தொடங்குகிறது என்பதைக் கண்டறிந்தார்.

நல்ல ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரம் பற்றிய அறிவு ஒருவரது வாழ்வின் தொடக்கமான முதல் 8 ஆண்டுக்குள் (8வயதுக்குள்) வழங்கப்பட வேண்டும் என்று சின்ஹா உறுதியாக ​​நம்புகிறார். இதுவே அவரை ஊட்டமளிக்கும் பள்ளி அறக்கட்டளையைத் (Nourishing School Foundation) தொடங்க வழிவகுத்தது. நீண்ட பயணத்தில் அவர் எதிர்கொண்ட சவால்களைப் பற்றி பேசுகையில்,

"ஆரம்பத்தில் அரசுப் பள்ளிகளில் உள்ள குழந்தைகள் எதிர்கொள்ளும் குறிப்பிட்ட சவால்களை நாங்கள் முழுமையாக அறிந்திருக்கவில்லை. ஆய்வுகள் மூலம்தான் அந்தப் பிரச்சனைகளைப் பற்றி புரிந்துகொண்டோம். பள்ளி பாடத்திட்டத்தில் கருவித்தொகுப்பை ஒருங்கிணைப்பதில் சவாலை எதிர்கொள்ள வேண்டியிருந்தது," என்றார்.

என்எஸ்எஃப் அமைப்பானது அரசுப் பள்ளிகளை அணுகி மாணவர்களின் வயது, உயரம், எடை, உணவு முறை மற்றும் கை கழுவும் பழக்கம் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய அடிப்படைக் கணக்கெடுப்பை நடத்துகிறது. கணக்கெடுப்பு நடத்திய பிறகு, அதன் முடிவுகளை பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள்.

"ஒரு பள்ளி எதிர்கொள்ளும் குறிப்பிட்ட சவால்களைப் புரிந்துகொள்ள கணக்கெடுப்பு எங்களுக்கு உதவுகிறது. அதனடிப்படையில் நாங்கள் அவர்களுக்கு உதவ முடியும்," என்றார் சின்ஹா.

விளையாட்டின் வழி ஊட்டச்சத்து கல்வி!

சுமார் 15 விளையாட்டுகள் மற்றும் ஊட்டச்சத்து, சுகாதாரம் மற்றும் நிலையான விவசாய நடைமுறைகளை மையமாகக் கொண்ட செயல்பாடுகளைக் கொண்ட கருவித்தொகுப்பை பள்ளிகளுக்கு வழங்குகின்றனர். ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரத்தினை குழந்தைகளுக்கு புரியும் வகையிலும், வேடிக்கையாகவும் கற்றுத்தரும் வகையில் அமைந்துள்ளது அவர்களது ஒவ்வொரு விளையாட்டுகளும். அதுகுறித்து சின்ஹா விளக்குகையில்,

" 'ஃபோ கார்டு' எனும் கார்டு விளையாட்டின்மூலம் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடுகளின் அறிகுறிகளை கண்டறிந்து, 'நண்பர் கார்டு' மூலம் இந்தக் குறைபாடுகளைச் சமாளிக்க உதவும் உணவு ஆதாரங்களைப் பற்றி அறிந்து கொள்கிறார்கள். அனைவரும் அறிந்த பாம்புகள் மற்றும் ஏணிகள் விளையாட்டின் மூலமும் ஊட்டச்சத்து குறித்து கற்கும் வகையில் உருவாக்கியுள்ளோம். அதாவதும், நேர்மறையான நடத்தைகளுக்கு வெகுமதியாக ஏணியில் ஏறுவது போன்றும், நொறுக்குத் தீனிகளை உண்பது, பழங்கள் சாப்பிடாதது போன்ற எதிர்மறையான நடத்தைகளுக்கு தண்டனையாக பாம்புக்கடிகள் வழங்கும் வகையில் பாம்பு மற்றும் ஏணி விளையாட்டினை வடிவமைத்தோம்," என்றார்.
Nourishing Schools Foundation

ஊட்டச்சத்து குறித்து குழந்தைகளுக்கு கற்பிப்பதுடன், சுகாதாரமாக இருக்க அறிவுறுத்தும் வகையிலும், அக்டிவிட்டிகளை குழந்தைகள் செய்ய வைக்கின்றனர். சோப்பு பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தை குழந்தைகளுக்குப் புரியவைக்கும் செயலையும் கற்றுதருகிறது. அச்செயல்பாட்டில், மாணவர்கள் தங்கள் கைகளில் சாக்பீஸ் தடவி, ஒருவருக்கொருவர் கைகுலுக்கி, பின்னர் சாதாரண நீரில் கைகளை கழுவுகின்றனர். ஆனால், சுகாதரத்தினை கடைப்பிடிக்க விழிப்புணர்வு மட்டும் போதாது என்பதால், அதற்கான சிறிய

தீர்வு உந்துதல் திட்டங்களையும் கொண்டுள்ளது அவ்வமைப்பு.

உதாரணமாக, குழந்தைகளுக்கு பள்ளித் தோட்டம் அமைக்க உதவும் வகையிலான ஒரு வழிகாட்டுதல் செயல்பாடு நடத்தப்படுகிறது. பின், பயிரை எவ்வாறு நடவு செய்வது, அறுவடை செய்வது மற்றும் விதைப்பது உள்ளிட்ட அனைத்து படிப்படியான தகவல்களையும் வழங்கும் வழிகாட்டி புத்தகத்தை வழங்குகிறது. இத்திட்டம் ஒரு பள்ளியில் இரண்டு ஆண்டுகளாக செயல்படுத்தப்படுகிறது. முதல் ஆண்டில், இது எட்டு வாரங்களுக்கு மேல் நீடித்து, ஒரு மிட்லைன் கணக்கெடுப்புடன் முடிவடைகிறது. இரண்டாம் ஆண்டில், கருவித்தொகுப்பின் மேம்படுத்தப்பட்ட பதிப்பை அறக்கட்டளை வெளியிடுகிறது.

ஊட்டச்சத்தும், சுகாதாரமும் எனும் மாணவர்களின் இருகண்கள்!

பள்ளி ஊழியர்கள் மற்றும் இதே துறையில் செயல்படும் உள்ளூர் என்ஜிஓக்கள் இடையேயான கூட்டு முயற்சிகள் மூலம் இந்த தோட்டம் அமைக்க குழந்தைகளை ஊக்குவிக்கும் திட்டத்தினை பள்ளிகளில் செயல்படுத்தப்படுகிறது. அதற்காக ஆசிரியர்கள் வகுப்பிலிருந்து ஒரு மாணவரைத் தேர்ந்தெடுத்து, அவரை செயல்பாடுகளை மேற்கொள்ள செய்கிறார்.

இரண்டு ஆண்டு திட்டத்தில் முதல் ஆண்டில், அறக்கட்டளையின் குழு கருவித்தொகுப்பைச் செயல்படுத்துவதில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு உதவி செய்கிறது. முதல் வருடத்திற்குப் பிறகு, அறக்கட்டளையின் ஆதரவுடன், கருவித்தொகுப்பை செயல்படுத்தும் பொறுப்பை என்ஜிஓக்கள் எடுத்துக்கொள்கின்றன. முடிவில், குழந்தைகளின் ஒட்டுமொத்த பாதிப்பைக் காண ஒரு எண்ட்லைன் கணக்கெடுப்பும் நடத்தப்படுகிறது

அப்படி, 2,500க்கும் மேற்பட்ட மாணவர்களிடம் எடுக்கப்பட்ட இந்த எண்ட்லைன் ஆய்வுகளின் முடிவில், ஊட்டச்சத்து குறைபாடுள்ள பள்ளி மாணவர்களின் விகிதம் 14% புள்ளிகள் குறைந்துள்ளதாகவும், சோப்பு அல்லது சானிடைசர் மூலம் கைகளை கழுவும் பள்ளி மாணவர்களின் விகிதம் 32% புள்ளிகள் அதிகரித்துள்ளதாகவும், தங்கள் ஊட்டச்சத்து தங்களது பொறுப்பு என்பதை உணர்ந்து செயல்படும் குழந்தைகளின் விகிதம் 14 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தெரிவித்தார் சின்ஹா.

என்எஸ்எஃப்-ன் கருவித்தொகுப்பு தனது குழந்தையின் உணவுப் பழக்கத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், குடும்பத்திற்கு வெளியே உள்ளவர்களுடன் தொடர்புகொள்வதிலும், குழு நடவடிக்கைகளில் தன்னை பங்கேற்பதிலும் அவர்களுக்கு நம்பிக்கையூட்டுவதாக உள்ளதாக அறக்கட்டளையின் செயல்பாடுகளால் பலனடைந்த குழந்தையின் தாய் ஒருவர் பகிர்ந்தார். மேலும், ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி அவர்கள் அறிந்திருப்பதால், அவர்கள் முன்பை விட இப்போது அதிக பழங்களைக் கேட்டு சாப்பிடுவதாக அவர் தெரிவித்தார்.

இதுவரை, என்எஸ்எஃப் ஆனது அதன் திட்டங்களை நாடு முழுவதுமுள்ள 230க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில் செயல்படுத்தியுள்ளது. மேலும், 60,000க்கும் மேற்பட்ட குழந்தைகளின் நலனில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அறக்கட்டளையின் இணை நிறுவனரான விஷ்ணு சுவாமிநாதன், முதன்மை ஆலோசகராக செயல்படுகிறார். அறக்கட்டளை அதன் திட்டங்களை செயல்படுத்த மானியங்கள் மற்றும் சிஎஸ்ஆர் நிதியினை பெற்றுக் கொள்கிறது. தனியார் பள்ளிகளுக்கான கருவித்தொகுப்பு குழந்தைகளுக்கு இலவசமாகக் கிடைக்கும் வகையில் ஆன்லைனில் கிடைப்பதாக சின்ஹா ​​தெரிவித்தார். அதில் சமச்சீர் உணவு, ஊட்டச்சத்து மற்றும் பல கருத்துக்கள் பற்றிய வீடியோக்கள் இருக்கும், என்றார்.

Nourishing Schools Foundation

தனியார் பள்ளிகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கருவிகளை அறக்கட்டளையானது ஒரு குழந்தைக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.3,000 முதல் ரூ.5,000 வரையில் வழங்குகிறது. ஆன்லைன் தொகுப்பு மே மாதம் முதல் தனியார் பள்ளிகளுக்கு கிடைக்கும், மேலும் இந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றார்.

"ஒரு அரசுப் பள்ளியில், நீங்கள் சரியான சுகாதார வசதிகள் அல்லது தண்ணீர் வசதிகள் இல்லாததை எதிர்கொள்கிறீர்கள். ஆனால் ஒரு தனியார் பள்ளியில் அப்படி இருக்காது. இங்கே, உடல் பருமன், சீரான உணவு, அல்லது வசதிகளை சரியான முறையில் பயன்படுத்துதல் போன்ற பிரச்சனைகள் உள்ளன," என்றார்.