Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT
Advertise with us

71 அமைச்சர்களுடன் பிரதமர் மோடியின் 3.0 ஆட்சி ஆரம்பம்!

71 மத்திய அமைச்சர்களுடன் நாட்டின் பிரதமராக தொடர்ந்து மூன்றாவது முறையாக பதவியேற்றார் நரேந்திர மோடி.

71 அமைச்சர்களுடன் பிரதமர் மோடியின் 3.0 ஆட்சி ஆரம்பம்!

Monday June 10, 2024 , 4 min Read

நாட்டிலுள்ள 543 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு நடைபெற்ற 18வது மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 293 இடங்களைக் கைப்பற்றியது. ஆட்சி அமைக்கத் தேவையான 272 இடங்கள் கிடைக்காததால் பாஜக தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்க முடியவில்லை.

பாஜக வென்ற 240 தொகுதிகளுடன் சேர்த்து சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சியின் 16 தொகுதிகள் மற்றும் 12 தொகுதிகளை வென்ற நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் ஆதரவுடன் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைத்துள்ளது.

மோடி அமைச்சரவை

மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி

தொடர்ந்து மூன்று முறை பிரதரமராக இருந்தவர் ஜவஹர்லால் நேரு என்கிற வரலாற்றை தொட்டிருக்கிறார் மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்திருக்கும் நரேந்திர மோடி. குடியரசுத் தலைவர் மாளிகையில் ஜுன்9 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க 8 ஆயிரம் பேருக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டது. திரைப் பிரபலங்கள், நாடாளுமன்றக் கட்டிடம் கட்டிய பணியாளர்கள், பெண் ரயில் டிரைவர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முதல்முறையாக பிரதமருக்கு ஆசி வழங்குவதற்காக 50 திருநங்கைகளும் இந்த முறை அழைக்கப்பட்டு இருந்தனர். பிரதமரின் பதவியேற்பிற்காக ராஷ்டிரபதி பவன் விழாக் கோலம் கொண்டிருந்தது. பிரதமரின் பதவியேற்பு விழாவில் அண்டை நாடுகளான இலங்கை, வங்கதேசம், மாலத்தீவு, நேபாளம், பூடான் நாடுகளின் பிரதமர்கள் வெளிநாட்டு தூதர்கள் பங்கேற்தால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிரதமராக நரேந்திர மோடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பிரதமராக பதவியேற்றுக் கொண்ட நரேந்திர மோடி ரகசிய காப்புப் பிரமாணமும் எடுத்துக் கொண்டார். பிரதமரைத் தொடர்ந்து அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 71 அமைச்சர்கள் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் எடுத்துக் கொண்டனர். அமைச்சரவையில் 24 மாநிலங்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள மத்திய அமைச்சர்களின் பட்டியல் இதோ:

குஜராத் மாநில அமைச்சர்கள்

1. அமித் ஷா (பாஜக)

2.எஸ் ஜெய்சங்கர் (பாஜக)

3.மன்சுக் மாண்டவியா (பாஜக)

4.சிஆர் பாட்டீல் (பாஜக)

5.நிமுபென் பாம்பானியா (பாஜக) – இணை அமைச்சர்

ஒடிசா மாநில அமைச்சர்கள்

6. அஸ்வினி வைஷ்ணவ் (பாஜக)

7.தர்மேந்திர பிரதான் (பாஜக)

8.ஜுவல் ஓரம் (பாஜக)

கர்நாடகா மாநில அமைச்சர்கள்

9. நிர்மலா சீதாராமன் (பாஜக)

10. எச்.டி.குமாரசாமி (ஜேடிஎஸ்)

11. பிரகலாத் ஜோஷி (பாஜக)

12. ஷோபா கரந்த்லாஜே (பாஜக) – இணை அமைச்சர்

13. வி சோமண்ணா (பாஜக) – இணை அமைச்சர்

மகாராஷ்டிரா மாநில அமைச்சர்கள்

14. பியூஷ் கோயல் (பாஜக)

15. நிதின் கட்கரி (பாஜக)

16. பிரதாப் ராவ் ஜாதவ் (சிவசேனா) – இணை அமைச்சர்

17. ரக்ஷா காட்சே (பாஜக) – இணை அமைச்சர்

18. ராம் தாஸ் அத்வாலே (இந்திய குடியரசுக் கட்சி) – இணை அமைச்சர்

19 முதளிதர் மோஹல் (பாஜக) – இணை அமைச்சர்.

கோவா மாநில அமைச்சர்கள்

20. ஸ்ரீபத் நாயக் (பாஜக) – இணை அமைச்சர்

21. ஜே & கே ஜிதேந்திர சிங் (பாஜக)

ஹிமாச்சல் மாநில அமைச்சர்கள்

22. ஜேபி நட்டா (பாஜக)

மத்திய பிரதேச மாநில அமைச்சர்கள்

23. சிவராஜ் சிங் சவுகான் (பாஜக)

24. ஜோதிராதித்ய சிந்தியா (பாஜக)

25. சாவித்ரி தாக்கூர் (பாஜக)

26. டாக்டர் வீரேந்திர குமார் (பாஜக)

27. துர்கா தாஸ் (பாஜக) – இணை அமைச்சர்

உத்தரபிரதேச மாநில அமைச்சர்கள்

28. ஹர்தீப் சிங் பூரி (பாஜக)

29. ராஜ்நாத் சிங் (பாஜக)

30. ஜெயந்த் சௌத்ரி (ஆர்எல்டி) – இணை அமைச்சர்

31. ஜிதின் பிரசாத் (பாஜக) – இணை அமைச்சர்

32. பங்கஜ் சவுத்ரி (பாஜக) – இணை அமைச்சர்

33. பிஎல் வர்மா (பாஜக) – இணை அமைச்சர்

34. அனுப்ரியா படேல் (அப்னா தால்-சோனிலால்) – இணை அமைச்சர்

35. கமலேஷ் பாஸ்வான் (பாஜக) – இணை அமைச்சர்

36. எஸ்பி சிங் பாகேல் (பாஜக) – இணை அமைச்சர்

பீகார் மாநில அமைச்சர்கள்

37. சிராக் பாஸ்வான் (லோக் ஜனசக்தி கட்சி-ராம் விலாஸ்)

38. கிரிராஜ் சிங் (பாஜக)

39. ஜிதன் ராம் மஞ்சி (இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா)

40. ராம் நாத் தாக்கூர் (ஜேடியு) – இணை அமைச்சர்

41. ராஜிவ் ரஞ்சன் (லாலன்) சிங் (ஜேடியு)

42. நித்யானந்த் ராய் (பாஜக) – இணை அமைச்சர்

43. ராஜ் பூஷன் சௌத்ரி (விகாஷீல் இன்சான் பார்ட்டி) – இணை அமைச்சர்

44. சதீஷ் துபே (பாஜக) – இணை அமைச்சர்

அருணாச்சல மாநில அமைச்சர்

45. கிரண் ரிஜிஜு (பாஜக)

ராஜஸ்தான் மாநில அமைச்சர்கள்

46. கஜேந்திர சிங் ஷெகாவத் (பாஜக)

47. அர்ஜுன் ராம் மேக்வால் (பாஜக) – இணை அமைச்சர்

48. பூபேந்தர் யாதவ் (பாஜக)

49. பகீரத் சவுத்ரி (பாஜக) – இணை அமைச்சர்

ஹரியானா மாநில அமைச்சர்

50. எம்எல் கட்டார் (பாஜக)

51. ராவ் இந்தர்ஜித் சிங் (பாஜக) – இணை அமைச்சர்

52. கிரிஷன் பால் (பாஜக) – இணை அமைச்சர்

கேரள மாநில அமைச்சர்

53. சுரேஷ் கோபி (பாஜக)

54. ஜார்ஜ் குரியன் – இணை அமைச்சர்

தெலுங்கானா மாநில அமைச்சர்கள்

55. ஜி கிஷன் ரெட்டி (பாஜக)

56. பாண்டி சஞ்சய் (பாஜக) – இணை அமைச்சர்

தமிழ்நாடு மாநில அமைச்சர்

57. எல் முருகன் (பாஜக) – இணை அமைச்சர்

மோடி அமைச்சரவை

மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி

ஜார்கண்ட் மாநில அமைச்சர்

58. சஞ்சய் சேத் – இணை அமைச்சர்

59. அன்னபூர்ணா தேவி (பாஜக)

ஆந்திரப் பிரதேச மாநில அமைச்சர்கள்

60. டாக்டர். சந்திர சேகர் பெம்மாசானி (TDP) – இணை அமைச்சர்

61. ராம் மோகன் நாயுடு கிஞ்சராபு (TDP)

62. சீனிவாச வர்மா (பாஜக) – இணை அமைச்சர்

மேற்கு வங்க மாநில அமைச்சர்கள்

63. சாந்தனு தாக்கூர் (பாஜக) – இணை அமைச்சர்

64. சுகந்தா மஜும்தார் (பாஜக) – இணை அமைச்சர்

பஞ்சாப் மாநில அமைச்சர்

65. ரவ்னீத் சிங் பிட்டு (பாஜக) – இணை அமைச்சர்

அசாம் மாநில அமைச்சர்

66. சர்பானந்தா சோனோவால் (பாஜக)

67. பபித்ரா மார்கெரிட்டா (பாஜக) – இணை அமைச்சர்

உத்தரகாண்ட் மாநில அமைச்சர்

68. அஜய் தம்தா (பாஜக) – இணை அமைச்சர்

டெல்லி அமைச்சர்

69. ஹர்ஷ் மல்ஹோத்ரா (பாஜக) – இணை அமைச்சர்

சத்தீஸ்கர் மாநில அமைச்சர்

70. தோஹன் சாகு – இணை அமைச்சர்

ஜம்மு காஷ்மீர் மாநில அமைச்சர்

71. ஜிதேந்திர சிங் – இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு)