Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT
Advertise with us

'கோவை ரைசிங்' -க்கான நேரமிது; தொழில்துறையினருடன் இணைந்து செயல்படுவோம்' - அமைச்சர் டிஆர்பி ராஜா!

கோயம்புத்தூரில் தொழில்துறையினருக்கு மாற்றத்தைத் தரும் கோவை ரைசிங் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா “கோயம்புத்தூர் nxt” அமைப்பினரை சந்தித்தார்.

'கோவை ரைசிங்' -க்கான நேரமிது; தொழில்துறையினருடன் இணைந்து செயல்படுவோம்' - அமைச்சர் டிஆர்பி ராஜா!

Saturday June 15, 2024 , 2 min Read

கோயம்புத்தூர் அடுத்த கட்ட பரிணாம வளர்ச்சியை காணும் விதமாக நகர்புற உள்கட்டமைப்பு வசதி, காலநிலை மாற்றத்திற்கு தீர்வு, கல்வி மேம்பாடு, சாலை மற்றும் போக்குவரத்து வசதி, தொழில்துறை முன்னேற்றம், நதிகள் மீட்டெடுப்பு உள்ளிட்ட அடிப்படை தேவைகளில் கவனம் செலுத்தப்படும் என்று ஆளும் கட்சியான திமுக நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் வாக்குறுதி அளித்திருந்தது.

கோவைக்குத் தேவையானவற்றை உள்ளடக்கி 'கோவை ரைசிங்' என்கிற தலைப்பில் அடுத்ததாக என்னென்ன தேவையை இந்தத் தொழில்நகரம் எதிர்நோக்கிக் காத்திருக்கிறது என்பது அறிவிக்கப்பட்டிருந்தது.

டிஆர்பி ராஜா

கோவை தொழில்துறையினருடன் அமைச்சர் டிஆர்பி. ராஜா

இந்நிலையில், தமிழ்நாடு அரசின் “கோவை ரைசிங்” தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக "கோயம்புத்தூர் NXT"-ஐ ஆதரித்து தமிழ்நாடு அரசின் தொழில்முறை அமைச்சர் டிஆர்பி. ராஜா முக்கிய தொழில்துறையினர் மற்றும் கார்ப்பரேட் தலைவர்களை ஜுன் 14ம் தேதி சந்தித்தார்.

கோவையில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது கோவை தொழில்துறையினர் தமிழக அரசுடன் இணைந்து பல்வேறு விதமான வளர்ச்சி மற்றும் தொழில் திட்டங்களை அமல்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டுள்ளது.

தொழில்துறையினர் மத்தியில் பேசிய அமைச்சர் ராஜா, தொழில்முனைவோரின் ஒத்துழைப்புடன் திமுக அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற உறுதியுடன் உள்ளதாக தெரிவித்தார்.

"கோயம்புத்தூர் NXT உடன் இணைந்து தமிழ்நாடு அரசு “கோவை ரைசிங்” என்று நிறைவேற்றித் தருவதாகக் கூறிய முன்னேற்றங்கள் நிச்சயமாக ஏற்படுத்தித் தரப்படும் என்று உறுதியளித்தார். மாநிலத்தில் தொழில்துறையினருக்கான வாய்ப்புகளை வழங்குவதற்கு அரசு எப்போதும் தயாராக இருக்கிறது, அவர்களுக்கான கதவுகள் திறந்தே உள்ளன," என்றார்.

மக்களின் தேவைகளைக் கேட்டறிந்து, ஆக்கப்பூர்வமான விமர்சனங்களுக்கு தேவையான தக்க நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க தமிழ்நாடு முதல்வர் தயங்கியதே இல்லை. நாம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றித் தர வேண்டும் என்பதை முதலமைச்சர் ஸ்டாலின் கட்டாயமாக்கி இருக்கிறார், நிச்சயமாக நாங்கள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றித் தருவோம் என்று ராஜா பேசினார்.

"நாம் அனைவரும் ஒன்றிணைந்து கோவையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வோம். கோவையில் சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என்று கோவை ரைசிங்கில் ஒரு வாக்குறுதியாக அளித்திருந்தோம். இந்த அரசு எவ்வளவு விரைவாக செயல்படுகிறதோ அதே வேகத்தில் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் முடிவுகள் வெளியான 10 நாட்களிலேயே ஸ்டேடியம் அமைப்பதற்கான சரியான இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு வந்திருக்கிறார்," என்று அமைச்சர் ராஜா குறிப்பிட்டார்.
சிஐஐ கூட்டம்

சிஐஐ தென் பிராந்திய தலைவர் டாக்டர் ஆர். நந்தினி, கொடிசியா தலைவர் திருஞானம், "கோயம்புத்தூர் NXT" செயல்திட்ட குழு உறுப்பினர் அர்ஜுன் பிரகாஷ், கொங்கு க்ளோபல் அமைப்பின் இயக்குனர் நந்தகுமார் மற்றும் கோவையின் இதர தொழில்துறையினரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். 

மாநிலத்தில் தொழில்துறையை மேம்படுத்துவதற்கு ஏற்ற சூழலை உருவாக்க நிர்ணயித்துள்ள இலக்கை அடைய அரசின் ஆதரவு அவசியம். இதன் மூலம் தொழில்துறைக்கான ஒரு தளத்தை உருவாக்க முடியும் என்பதோடு அரசும் பொருளாதார ரீதியில் பலம் பெறும்.

"வருவாய், தொழில்நடத்துவதற்கான எளிமையான விதிமுறைகள், கல்வி, தொழில்துறை மேம்பாடு, உள்கட்டமைப்பு உள்ளிட்ட ஐந்து பிரதான அளவீடுகளில் இந்தியாவில் முதல் ஐந்து இடங்களில் ஒன்றாக தமிழ்நாடும் அதிவேக வளர்ச்சி நிலையை அடைந்துள்ளது பாராட்டிற்குரியது," என்று நந்தினி தெரிவித்தார்.
trb raja

கோவை சிஐஐயின் முன்னாள் தலைவரான அர்ஜுன் பிரகாஷ் பேசுகையில்,

“கோயம்புத்தூர் nxt” ஒரு முக்கியமான திட்டம், நிலையான வளர்ச்சியை உள்ளடக்கி கோவையை ஆசியாவிலேயே மிக விரைவாக வளர்ந்து வரும் பிராந்தியங்களில் ஒன்றாக மாற்ற வேண்டும் என்பதே இது தொடங்கப்பட்டதற்கான நோக்கம். உள்ளூரில் தொழில்துறையை வலுப்படுத்த வேண்டும், புதிய முதலீடுகளை ஈர்க்க வேண்டும், ஸ்டார்ட் அப்களை அதிகம் உருவாக்க வேண்டும் என்கிற பொது காரணத்திற்காக மண்டல அளவிலான அமைப்புகள் அனைத்தும் ஒன்றிணைந்து தங்களது பங்களிப்பை செலுத்த வேண்டும் என்றும் அர்ஜுன் குறிப்பிட்டார்.

‘நடுத்தர தொழில்துறையினரை ஊக்கப்படுத்தவும் சர்வதேச நிறுவனங்களுடன் இணைந்து செயல்படும் வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் விதத்தில் MSMEகளுக்கென பிரத்யேக உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்த வேண்டும் என்று கொடிசியா தலைவர் திருஞானம் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை முன்வைத்துள்ளார்.