Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT
Advertise with us

'பிரச்சாரத்திற்கு கிரவுட்ஃபண்டிங்' - நிதி திரட்டி குஜராத்தில் காங்கிரஸ் எம்.பி ஆன ஜெனிபென் தாகோர்!

குஜராத்தில் 10 ஆண்டுகளுக்குப் பின்னர் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றிக்கு காரணமான ஜெனிபென் தாகோர். இவர் பிரச்சாரத்திற்காக கிரவுட்ஃபண்டிங் மூலம் நிதியை திரட்டி மக்களின் மனதை வென்று நாடாளுமன்ற உறுப்பினராகி இருக்கிறார்.

'பிரச்சாரத்திற்கு கிரவுட்ஃபண்டிங்' - நிதி திரட்டி குஜராத்தில் காங்கிரஸ் எம்.பி ஆன ஜெனிபென் தாகோர்!

Wednesday June 05, 2024 , 3 min Read

பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷாவின் சொந்த மாநிலமான குஜராத்தில் கடந்த 2014 மற்றும் 2019 மக்களவைத் தேர்தல்களில் காங்கிரஸ் ஒருதொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.

இங்கு தொடர்ந்து 3-வதுமுறையாக அனைத்து தொகுதிகளையும் கைப்பற்ற பாஜக இலக்கு நிர்ணயித்தது. பாஜகவின் இலக்கை தகர்த்து 10 ஆண்டுகளுக்குப் பிறகு குஜராத் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. குஜராத்தின் பனஸ்கந்தா தொகுதியில் வேட்பாளராக களமிறங்கிய ஜெனிபன் தாகோர் வெற்றிவாகை சூடி ஒரு தசாப்தத்திற்குப் பிறகு காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிரை அளித்திருக்கிறார்.

ஜெனிபென்

பிரியங்கா காந்தியுடன் ஜெனிபென் தாகோர்

பனஸ்கந்தா தொகுதியில் காங்கிரஸ், பாஜக இரண்டு கட்சிகளுமே பெண் வேட்பாளர்களை களமிறக்கின. 44 வயதாகும் கெனிபென் தாகோர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு இரண்டு முறை எம்எல்ஏவாக இருந்தவர். 2017 தேர்தலில் குஜராத் சட்டசபை சபாநாயகரை தோற்கடித்து எம்எல்ஏ பதவியை வென்று ‘மிகப்பெரும் போராளி’ என்கிற பெயரைப் பெற்றார்.

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் அரசு பொறியியல் கல்லூரியில் கணித பேராசிரியராக பணியாற்றும் ரேகாபென் சௌத்ரி பனஸ்கந்தா தொகுதியில் போட்டியிட்டார். இவர் முதல் முறையாக தேர்தல் களம் கண்டார். பாஜகவின் இரும்புக் கோட்டை குஜராத்தின் 26 தொகுதிகள் என்று இருந்தது, நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றாவது முறையும் காங்கிரஸ் வெற்றி பெறாவிட்டால் கிளீன் ஸ்வீப் என பெருமைப்படலாம் என்று இருந்த நேரத்தில், அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் ஜெனிபென்.

30,406 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளரை வீழ்த்தி குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கான புத்தொளியை பாய்ச்சி இருக்கிறார் இவர்.

வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை பெற்றதைத் தொடர்ந்து முதலில் கருத்து தெரிவித்த ஜெனிபென், ‘வாய்மை வெல்லும்’ இந்த வெற்றி பனஸ்கந்தா மக்களுக்கு கிடைத்த வெற்றி என்று தெரிவித்திருந்தார். ஏழு ஆண்டுகளுக்கு முந்தைய வருமான வரி வழக்கு ஒன்றிற்காக மத்திய அரசு ரூ.115.321 கோடி நிதி உள்ள 11 வங்கி கணக்குகளை முடக்கி வைத்துள்ளதால் தேர்தல் செலவுக்கு வேட்பாளர்களுக்கு நிதி உதவி அளிக்க முடியாத நிலையில் இருப்பதாக கடந்த மார்ச் மாதம் குஜராத் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சக்திசிங் கோகில் ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார். இதனையடுத்து, தன்னுடைய பிரச்சார செலவுக்காக கிரவுஃபண்டிங் மூலம் ஜெனிபென் நிதி திரட்டினார்.

தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கோகில்,

"குஜராத்தில் காங்கிரஸ் ஒரு இடம் கூட வெற்றி பெறாது என்று பாஜக கூறியது, குஜராத்தில் ஒவ்வொரு வேட்பாளரும் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்று தெரிவித்து இருந்தது. ஒன்றிரண்டு வேட்பாளர்களைத் தவிர பாஜகவின் மற்ற வேட்பாளர்கள் அதிக வாக்கு வித்தியாசமின்றியே வெற்றி பெற்றுள்ளனர். ஜெனிபெனை வெற்றி பெறச் செய்ததற்காக குஜராத் வாக்காளர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்," என்று கூறி இருந்தார்.
ஜெனிபென்2

ஜெனிபென் தாகோர், பனஸ்கந்தா எம்.பி

“என்னுடைய வேட்புமனுவை தள்ளுபடி செய்வதற்கு பல்வேறு அழுத்தங்கள் தரப்பட்டன. மாவட்ட ஆட்சியர், வழக்கறிஞர் மூலம் எதிர்கட்சியினர் அழுத்தம் தந்தனர், என்னுடைய மனுவை நிராகரிக்கச் செய்ய முயன்றனர் ஆனால், தேர்தல் நடத்தும் அதிகாரி நியாயத்துடன் நடந்து கொண்டார், அவருக்கு நான் நன்றியை தெரித்துக் கொள்கிறேன்,” என்று ஜெனிபென் கூறியுள்ளார்.

பெண்கள் நல்வாழ்வு தொடர்புடைய பிரச்னை என்றால் அவர்களின் நன்மைக்காக ஆளும் பாஜக சட்டம் கொண்டுவந்தால் கூட தயங்காமல் அதற்கு ஆதரவாக குரல் கொடுத்தவர் தாகோர். கடந்த ஆண்டு சட்டசபை பட்ஜெட் கூட்டத்தில் பாஜக எம்எல்ஏ ஃபதேசிங் சௌஹான் குஜராத் திருமணப் பதிவு சட்டம் 2006ல் திருமண பதிவுக்கு பெற்றோர் கையெழுத்து கட்டாயம், அதே போல பெண்ணின் பிறந்த ஊரை பிறப்பு சான்றிதழில் குறிப்பிடுவது கட்டாயம் என்று வலியுறுத்திய போது கட்சி பாகுபாடின்றி அவருக்கு ஆதரவாகக் குரல் எழுப்பியவர் தாகோர்.

2019ம் ஆண்டில் தாகோர் இனத்தில் இளம்பெண்கள் செல்போன் பயன்படுத்துவது தடை செயப்படுவதாக ஒரு தீர்மானம் கொண்டு வந்த போது அதற்கு ஆதரவு தெரிவித்தவர் ஜெனிபென். இளம்பெண்கள் செல்போனால் கெட்டுப் போகாமல் படிப்பில் கவனம் செலுத்தலாம் தேவையற்ற சிக்கல்களில் சிக்கிக் கொள்ளாமல் இருக்கலாம் என்று தாகோர் அப்போது தெரிவித்து இருந்தார்.

2019 ஜூலையில் பனஸ்கந்தாவின் தண்டிவாடா தாலுகாவில் உள்ள 12 கிராமங்கள் கலப்பு திருமணத்திற்கு தடை இளம்பெண்கள் செல்போன் பயன்படுத்தத் தடை உள்ளிட்ட 9 தீர்மானங்களை கொண்டுவந்தன.