Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT
Advertise with us

'செய்நன்றி மறவா பெண்' - ரூ.1 கோடி சொத்தை ரிக்ஸா ஓட்டுநருக்கு உயில் எழுதி வைத்து நெகிழ்ச்சி!

25 ஆண்டுகளாக ஆதரவாக இருந்த ரிக்ஸா ஓட்டுநர் குடும்பம்!

'செய்நன்றி மறவா பெண்' - ரூ.1 கோடி சொத்தை ரிக்ஸா ஓட்டுநருக்கு உயில் எழுதி வைத்து நெகிழ்ச்சி!

Monday November 15, 2021 , 2 min Read

ஒடிசாவின் கட்டாக் நகரில் வசிப்பவர் 63 வயதான பெண் மினாட்டி பட்நாயக் என்பவர். மினாட்டியின் கணவரும், மகளும் கடந்த வருடம் எதிர்பாராத விதமாக இறந்துவிட்டதால், கட்டாக்கின் சுதாஹத் கிறிஸ்டியன்சாஹி பகுதியில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.


இவர் தற்போது ஒருகோடி ரூபாய் மதிப்புள்ள தனது வீடு உள்ளிட்ட சொத்துக்கள் மற்றும் தங்க ஆபரணங்கள் அந்தப் பகுதியில் வசிக்கும் ஒரு ரிக்ஸா ஓட்டுநருக்கு தனமாக உயில் எழுதி வைத்துள்ளார்.


இதே கட்டாக் நகரில் வசிக்கும் அந்த ரிக்ஸா ஓட்டுநரின் பெயர் புத்தா சமால். 53 வயதாகும் இவர் கடந்த சில ஆண்டுகளாக மினாட்டி பட்நாயக் குடும்பத்துக்கு உதவியாக இருந்துள்ளார். குறிப்பாக கடந்த ஆண்டு புற்றுநோயால் தனது கணவரான 70 வயதான கிருஷ்ண குமார் பட்நாயக்கை இழந்த பிறகும், அதற்கடுத்த ஆறு மாதங்களுக்குப் பிறகு அவரது 31 வயது மகள் கோமல் குமாரி ஒரு தீ விபத்தில் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மாரடைப்பு ஏற்பட்டு மறைந்த பிறகும் மினாட்டி மிகவும் மனம் தளர்ந்து போயுள்ளார்.

ரிக்ஸா ஓட்டுநர்

மன வருத்தத்தில் உணவு உண்ணாமல் உடலையும் வருத்திக் கொண்டுள்ளார். ஆனால், ரிக்ஸா ஓட்டுநர் புத்தாவும் அவரது குடும்பமும் மினாட்டிக்கு உணவு கொடுப்பதில் இருந்து பல்வேறு உதவிகளைச் செய்து அவரை கவனித்து வந்துள்ளனர். இதற்கு மதிப்பு செய்யும் வகையில் தான் இப்போது தனது சொத்துக்களை ரிக்ஸா ஓட்டுநர் குடும்பத்துக்கு உயில் எழுதி வைத்துள்ளார்.


மினாட்டி பேசுகையில்,

“கடந்த ஆண்டு எனது கணவனையும் மகளையும் அடுத்தடுத்து இழந்த பிறகு, நான் தனியாக, மரணத்திற்காக காத்திருந்தேன். எனக்கு உதவிய புத்தா மற்றும் அவரது குடும்பத்திற்கு அனைத்தையும் தானம் செய்ய முடிவு செய்தேன். கடந்த 25 வருடங்களாக எனக்கும் எனது குடும்பத்துக்கும் புத்தா எவ்வளவோ செய்துள்ளார், அவருக்கு நான் நன்றியுள்ளவளாக இருக்க விரும்புகிறேன். புத்தா குடும்பத்துக்கென சொந்தமாக ஒரு தங்குமிடம் இருக்க வேண்டும் என்று நான் விரும்பினேன்,” என்றார்.

என் மகள் படிக்கும் போது, ​​புத்தா தான் அவளை பள்ளிக்கு அழைத்துச் சென்று அழைத்து வந்தார். என் கணவர் கடைசி வரை புத்தாவை நம்பினார். எனது மகளின் மரணத்திற்குப் பிறகு, எனது மாமியாரோ அல்லது எனது பெற்றோர் குடும்பத்தைச் சேர்ந்த எவரும் எனது உடல்நலம் குறித்து விசாரிக்கவோ அல்லது எனது அழைப்புகளுக்கு பதிலளிக்கவோ இல்லை.


கடந்த 25 ஆண்டுகளாக புத்தா மற்றும் அவரது குடும்பத்தினர் எனக்கு ஆதரவாக இருந்தனர். அவர்கள் இத்தனை வருடங்களாக எனக்கு மரியாதை அளித்து என் குடும்பத்தை கவனித்துக் கொள்கிறார்கள்.

ரிக்ஸா ஓட்டுநர்
அவருக்கு 50 வயது ஆனாலும், அவரும் அவர் மனைவியும் என்னை அம்மா என்றும், அவரது குழந்தைகள் என்னை பாட்டி என்றும் அழைப்பார்கள். அவரது எளிமை மற்றும் நேர்மையுடன் ஒப்பிடும்போது சொத்து ஒன்றும் இல்லை.

நான் ஒரு இதய நோயாளி மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ளது. இதனை சமாளிக்க உதவுவதும் அவர்கள் தான். புத்தாவின் மனைவி வீட்டு வேலைகளில் உதவுகிறார். சொத்தை ஒப்படைக்க முடிவு செய்தபோது, ​​என் உடன்பிறந்தவர்கள் மத்தியில் ஒருவித மனக்கசப்பு ஏற்பட்டது. ஆனால், நான் உறுதியாக இருந்ததால், அவர்கள் எதிர்க்கவில்லை, என்றுள்ளார்.


ரிக்ஸா ஓட்டுநர் புத்தா இது தொடர்பாக பேசுகையில்,

“சொத்து பற்றி நான் கனவிலும் நினைத்ததில்லை. ஆனால் மினாட்டியின் கணவர் இறந்த பிறகு எனது குடும்பத்தினர் அவரை கவனித்து கொள்வதில் உறுதியாக இருந்தனர். அவர் உயிருடன் இருக்கும் வரை நாங்கள் கவனித்துக்கொள்வோம். இந்த சொத்தை ஏற்க முதலில் தயக்கம் காட்டினேன். ஆனால் மினாட்டி அம்மா உறுதியாக இருந்ததால் ஏற்றுக்கொண்டோம்," என்றுள்ளார்.

தகவல் உதவி: ஏஎன்ஐ | தமிழில்: மலையரசு