Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT
Advertise with us

இந்தியாவின் முதல் உலகளாவிய திறன் மையம் (GCC) - சென்னையில் 45,000 அடி இடத்தை குத்தகைக்கு எடுக்கும் Adidas!

சென்னையில் சுமார் 45,000 சதுர அடி இடத்திற்கான ஒப்பந்தமாகும் இது, சீனாவிற்கு வெளியே ஆசியாவில் இந்நிறுவனத்தின் முதல் மையம் இதுவே.

இந்தியாவின் முதல் உலகளாவிய திறன் மையம் (GCC) - சென்னையில் 45,000 அடி இடத்தை குத்தகைக்கு எடுக்கும் Adidas!

Monday June 24, 2024 , 2 min Read

விளையாட்டு காலணிகள் மற்றும் ஆடை தயாரிப்பு ஜெர்மானிய நிறுவனமான அடிடாஸ், இந்தியாவில் அதன் முதல் உலகளாவிய திறன் மையத்திற்கான (GCC) குத்தகை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. சென்னையில் சுமார் 45,000 சதுர அடி இடத்திற்கான ஒப்பந்தமாகும் இது. சீனாவிற்கு வெளியே ஆசியாவில் இந்நிறுவனத்தின் முதல் மையம் இதுவே.

இதற்காக சென்னை ஒலிம்பியா பின்னக்கிள் வளாகத்தில் உள்ள ஃப்ளெக்ஸ் ஆபரேட்டர் ஸ்மார்ட்வொர்க்ஸில் 700 இருக்கைகள் கொண்ட இடத்தை நிறுவனம் எடுத்துள்ளது. ஒரு சதுர அடிக்கு ரூ.65 வாடகை என ஒப்பந்தமாகியுள்ளதாக இது குறித்து செய்தி அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

adidas

இந்த அலுவலகம் பழைய மகாபலிபுரம் சாலையில் அமைந்துள்ளது, இது நகரின் வடக்கு புறநகர்ப் பகுதியில் உள்ள மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப வழித்தடமாகும்.

"நாங்கள் சமீபத்தில் இந்தியாவில் சென்னையில் ஒரு புதிய அலுவலக இடத்தை வாடகைக்கு எடுத்துள்ளோம் என்பதை உறுதிப்படுத்த முடியும்," என்று அடிடாஸ் நிறுவனமும் தன் மின்னஞ்சல் மூலம் இந்தச் செய்தியை உறுதி செய்துள்ளது. ஆனால், மற்ற விவரங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை, என பிசினஸ் டுடே செய்தியில் தெரிவித்துள்ளது.

அடிடாஸ் நிறுவனத்தால் அமைக்கப்படும் இந்த உலகளாவிய திறன் மையம் என்பது இந்தியா வழங்கும் தொழில் சலுகைகளினால் ஈர்க்கப்பட்ட திட்டமாகும். செலவினங்களின் குறைவு என்பதோடு நாட்டில் காணக்கிடைக்கும் திறமைகளும் இதைத் தொடங்க உந்துதலாக இருந்துள்ளது.

உலகளாவிய பன்னாட்டு நிறுவனங்கள், உயர் தொழில்நுட்ப திறன்களுக்காகவும், உலகளவில் தங்கள் செயல்பாடுகளை இயக்கும் அதிநவீன கண்டுபிடிப்புகளுக்காகவும் இந்தியாவில் GCC களை அதிகளவில் பயன்படுத்துகின்றன. FY23 இன் படி, இந்தியாவில் சுமார் 2740 GCC-க்கள் இருந்தன என்று CBRE இந்தியா தரவு கூறுகிறது.

adidas

பெங்களூருவில் தான் இத்தகைய உலகளாவிய திறன் மையங்கள் அதிகமாக உள்ளன. சென்னை இந்தியாவில் உள்ள மொத்த ஜிசிசி மையங்களில் 9%-ஐக் கொண்டுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பரில், பாங்க் ஆஃப் அமெரிக்கா, சென்னையின் OMR மண்டலத்தில் இதே போல் பெரிய இடத்தைக் குத்தகைக்கு எடுத்தது. அமெரிக்காவிற்கு வெளியே வங்கியின் மிகப்பெரிய கேப்டிவ் சென்டர்களில் ஒன்று என்று கருதப்படுகிறது. இந்நிலையில், அடிடாஸின் உலகளாவிய திறன் வளர்ப்பு மையம் சென்னைக்கு வரவிருக்கிறது.

தகவலுதவி: தி இந்து பிசினஸ்லைன்