Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT
Advertise with us

'இது என் கனவு ' - பாரிஸ் ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதலுக்கு தேர்வு ஆன தமிழக வீரர் பிரித்விராஜ் தொண்டைமான்!

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தமிழ்நாட்டின் புதுக்கோட்டையைச் சேர்ந்த துப்பாக்கிச்சுடுதல் வீரர் பிரித்விராஜ் தொண்டைமான் தகுதி பெற்றுள்ளார்.

'இது என் கனவு ' - பாரிஸ் ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதலுக்கு தேர்வு ஆன தமிழக வீரர் பிரித்விராஜ் தொண்டைமான்!

Wednesday June 19, 2024 , 2 min Read

2024ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் ஃபிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற உள்ளது. வருகிற ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 11 தேதி வரை ஒலிம்பிக் போட்டிகள் அங்கு நடைபெற உள்ளன.

இந்நிலையில், பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் துப்பாக்கிச் சுடுதல் ஆடவர் பிரிவுக்கு தமிழ்நாட்டின் புதுக்கோட்டையைச் சேர்ந்த துப்பாக்கிச்சுடுதல் வீரர் பிரித்விராஜ் தொண்டைமான் தகுதி பெற்றுள்ளார்.

பிரித்விராஜ் தொண்டைமான் தலைமையில் 5 பேர் கொண்ட இந்திய அணி துப்பாக்கிச்சுடுதல் ஆடவர் பிரிவுக்கு தகுதி பெற்று இருப்பதாக தேசிய துப்பாக்கிச்சுடுதல் சங்கம் அறிவித்துள்ளது.

பெண்கள் பிரிவில் ராஜேஸ்வரி குமாரியும், ஆண்கள் பிரிவில் அனந்த்ஜீத் சிங் நருகாவும், ரைசா தில்லன் மற்றும் மகேஸ்வரி சௌஹான் ஆகியோரைத் தவிர, ஒலிம்பிக் ஒதுக்கீட்டைப் பெற்ற பிறகு பாரிஸிற்கான தங்கள் இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளனர். அனந்த்ஜீத் மற்றும் மகேஸ்வரி கலப்பு ஸ்கீட்டிலும் போட்டியிடுவார்கள். பெண்களுக்கான பிஸ்டல் ஒதுக்கீட்டில் ஒன்று மாற்றப்பட்ட நிலையில், பெண்கள் பிரிவில் இரண்டாவது போட்டியாளராக ஸ்ரேயாசி சிங் முன்மொழியப்பட்டுள்ளார்.

prithviraj thondaiman

யார் இந்த பிரித்விராஜ் தொண்டைமான்?

தமிழகத்தின் புதுக்கோட்டை சமஸ்தானத்தைச் சேர்ந்தவர் தொண்டைமான் மன்னர்களின் வாரிசான பிரித்விராஜ் தொண்டைமான்.

“பள்ளிப் பருவத்தில் இருந்தே எனக்கு விளையாட்டு மிகவும். கிரிக்கெட்டை விரும்பி விளையாடுவேன், ஆனால் அது ஒரு குழு போட்டி, என்னுடைய பெயர் தனித்துவமாக இருப்பது போன்ற ஒரு விளையாட்டை நான் தேர்ந்தெடுக்க விரும்பினேன். அப்பா துப்பாக்கிச் சுடுதல் போட்டிகளில் பங்கேற்க செல்லும்போது நானும் அவருடன் சேர்ந்து சென்றிருக்கிறேன், அப்படியே நானும் துப்பாக்கி சுடுவதை கற்றுக்கொண்டேன்.

“1992ல் மாநில அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் சாதாராணமாக பங்கேற்றேன், அதில் வெண்கலப் பதக்கம் பெற்றேன். அந்தச் செய்தி பத்திரிக்கைகளில் வெளியானதும் பலரும் பாராட்டினர். அதுவே எனக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியது, இந்தியாவுக்காக பதக்கங்களை வெல்ல வேண்டும் என்பதை என்னுடைய இலக்காக்கினேன்,” என்று சமூக ஊடகத்தில் தெரிவித்துளளார்.

மன்னர் பரம்பரையைச் சேர்ந்தவர் என்கிற பெருமையைத் தாண்டி தான் விளையாட்டில் தனிப்பெருமை சேர்க்க வேண்டும் என்கிற இலக்கை நோக்கி பயணிக்கத் தொடங்கினேன். பத்தாம் வகுப்பில் இருந்தே துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டில் மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றேன், என்கிறார்.

prithviraj
“என்னுடைய கனவு மற்றும் 4 வருடங்களாக கடினமாக பயிற்சி எடுத்துக்கொண்டதன் பலனை இப்போது நான் அடைந்திருக்கிறேன்.ம்பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்குபெற தகுதி பெற்றிருக்கும் இந்த தருணம் நான் மிகவும் பெருமைப்படக்கூடிய தருணம். இந்தியாவில் இருந்து அதிலும் குறிப்பாக தமிழ்நாடு சார்பாக ஒலிம்பிக்கில் விளையாடப் போவது எனக்கு மிகப்பெரிய பெருமை.“

முதன்முதலில் ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கிச் சுடுதலில் தான் வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து, 4 பதக்கங்களை வென்றிருக்கிறேன். அதை இன்னும் அதிகரிக்கும் விதமாக இந்த முறை தங்கப்பதக்கம் வெல்ல வேண்டும் என்பதே என்னுடைய இலக்கு நிச்சயமாக அதற்கான கடின உழைப்பை செலுத்த நான் தயாராக இருக்கிறேன்.

“சுமார் 15 ஆண்டுகளாக நான் துப்பாக்கி சுடுதல் பயிற்சியை எடுத்துக் கொண்டிருக்கிறேன். கடந்த முறை உலகக் கோப்பையில் 2 பதக்கங்களை வென்றேன், ஆசிய விளையாட்டுகளிலும் பதக்கம் பெற்றிருக்கிறேன், ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்காக 4 ஆண்டுகளாக தயாராகி வருகிறேன். நிச்சயமாக பதக்கத்தை வெல்வேன்” என்று உறுதியோடு கூறி இருக்கிறார் பிரித்விராஜ்.

தமிழகத்திற்கு பெருமைகளை சேர்த்துக் கொண்டிருக்கும் பிரித்விராஜ் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்ல வேண்டும் என்று அனைத்துத் தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

தகவல் உதவி: தி ஹிந்து